சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே உள்ள மூலகொத்தளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததில், அங்கு கஞ்சாவை பொட்டலங்களாக மடித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கஞ்சா விற்ற இருவர் கைது! 74 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 74 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, கஞ்சா விற்பனை செய்துவந்த திருவள்ளூரைச் சேர்ந்த சிவா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 74 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் விற்க பயன்படுத்திய இருசக்கர சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். சிவா அளித்த தகவலின் அடிப்படையில் இவரது கூட்டாளியான தரமணியை சேர்ந்த பரமா என்கிற பரமசிவம் என்பவரை வீட்டில் வைத்து தனிப்படையினர் கைது செய்தனர்.
பரமா மீது ஏற்கெனவே கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.