சென்னை தி.நகர் பிரேம் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (39). இவர் அனகாபுத்தூர் கலைவாணர் தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
நேற்றிரவு (ஜன.21) இவர் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி அவரின் செல்ஃபோன், இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (32) மற்றும் விவேக் (27) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்ஃபோனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இருவரும் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: கடையை உடைத்து 36 செல்ஃபோன்கள் திருட்டு: 4 பேர் கைது!