தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ரியல் எஸ்டேட் பெயரில் ஹைடெக் விபச்சாரம்.. இருவர் சிக்கியது எப்படி? - விபச்சார தொழிலில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் விபச்சார தொழில் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Dec 26, 2022, 6:35 AM IST

Updated : Dec 26, 2022, 11:52 AM IST

சென்னை: விருகம்பாக்கம் சாரதா நகர் ரெட்டி தெருவில் இயங்கி வரும் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் விபச்சாரம் நடப்பதாக அப்பகுதி மக்கள் விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த கல்யாண் குமார்( வயது 45), சென்னை திருவொற்றியூர் பகுதி சேர்ந்த இமேக்லேட் மேரி( வயது 38) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்ட போலீசார் அவர்களை மயிலாப்பூர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட கல்யாண் குமார் மற்றும் இமேக்லேட் மேரி ஆகிய இருவரும் விசாரணைக்கு பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:திருட வந்த வீட்டில் எதுவும் இல்லாததால் பெட்ரோலை திருடிச் சென்ற திருடர்கள்

Last Updated : Dec 26, 2022, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details