தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசுத் தலைவருக்கு கருப்புக் கொடி - 7 பேர் கைது! - two arrested for planning black flag protest against president

குடியரசு தலைவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த ஏழு பேரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

arrest
கைது

By

Published : Aug 1, 2021, 10:51 PM IST

Updated : Aug 1, 2021, 11:45 PM IST

சென்னை: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (ஆகஸ்ட் 2) சென்னை வர உள்ளார். மாலையில் சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்தை அவர் திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் சென்னை வரும்போது 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி, அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில், தமிழ்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த இராமசாமி, இளஞ்சென்னியன் ஆகிய இருவரை சைதாப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

மேலும், மதுரை, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் இந்த கைது நடவடிக்கையானது கருத்துரிமையைப் பறிக்கும் செயல் என தமிழ்தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:குடியரசு தலைவர் வருகை - முழு உஷார் நிலையில் காவலர்கள்

Last Updated : Aug 1, 2021, 11:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details