சென்னை தரமணி பகுதியில் சில நபர்கள் பானையில் மதுபானம் தயாரித்து விற்பதாக கோட்டூர்புரம் நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் விநாயக மூர்த்திக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி தரமணி ஸ்ரீராம் நகர் பகுதிக்கு நேரில் சென்று சோதனை செய்யப்பட்டது. சோதனையில் தரமணி ஸ்ரீராம் நகர் பகுதியில் மதுபானம் தயாரித்த இருவரைக் அவர்கள் கைதுசெய்துள்ளனர்.
பானையில் மதுபானம் தயாரித்த இருவர் கைது! - wine production in potery
சென்னை: தரமணி அருகே மண்பானையில் மதுபானம் தயாரித்த இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவினால் மதுபானக் கடைகள் செயல்பட தடைநீடித்துவருகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த மதுபான தயாரிப்பில் இருவரும் கவனம் செலுத்தியுள்ளனர். இவர்களிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீனிவாசன் என்பவர் தனது வீட்டில் பானையில் பழச்சாற்றைச் சேர்த்து மதுபானம் தயாரித்ததும், இதற்கு அவரது வீட்டின் உரிமையாளர் வெற்றிவேல் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. ஒரு லிட்டர் பாட்டிலில் (2 பாட்டில்கள்) மது கலந்த பழச்சாற்றைப் பானை மூலமாகத் தயாரித்து விற்பனை செய்ததும் விசாரணையில் வெளிச்சமானது.
தொடர்ந்து காவல் துறை மதுபானங்களைக் கையகப்படுத்தி, இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:'என் வண்டியைத் திருடுனது இவர்தாங்க...' - திருடியவரை போலீசிடம் ஒப்படைத்த பாதிக்கப்பட்டவர்!