சென்னை: திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த இரண்டு பேரை அழைத்து சோதனை செய்தனர். அவர்கள் இருவரும் ரேசன் அரிசியை மோட்டார் சைக்களில் வைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது.
சென்னையில் 300 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது! - ரேஷன் அரிசி பறிமுதல்
திருவொற்றியூர் பகுதியில் மோட்டார் சைக்களில் 300 கிலோ ரேசன் அரிசியைக் கடத்த முயற்சி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
![சென்னையில் 300 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது! Ration rice](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:47:05:1630775825-tn-che-03-thiruvottiyurrationricethefterarrest-pic-script-tn10055-04092021183307-0409f-1630760587-532.jpg)
Ration rice
உடனடியாக, காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 300 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட இருவரும் திருவொற்றியூர், அண்ணாமலை நகர் ஆறாவது தெருவைச் சேர்ந்த ரமேஷ் (25), கே.சி.பி ரோட்டை சேர்ந்த ஹரி (20) என்பதும் தெரிய வந்தது.
உடனடியாக அவர்கள் மீது ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.