சென்னை: புறநகர் பகுதிகளில் தடை செய்யபட்ட ஹெராயின் போதைப் பொருளை கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் ரவி, ப்ரமிளா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து சிட்லபாக்கம், சேலையூரில் பகுதிகளில் கண்காணித்து வந்தனர். அப்போது சிட்லபாக்கத்தில் ஒருவர் தனது கூட்டாளி ஒருவரிடம் ஹெராயின் விநியோகம் செய்வது தெரியவந்து. அவரை காவல் துறையினர் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது
ஆனால், இருவரும் தனித்தனி சொகுசு காரில் தப்பி சென்றார். இதனையடுத்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர், கூட்டாளியின் காரை மடக்கிப் பிடித்து அதிலிருந்து 350 கிலோ தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.
இதனிடையே வேளச்சேரி சாலை வழியாக சொகுசு காரில் அதிவேகத்தில் தப்பிச் சென்ற முக்கிய நபரை மற்றொரு குழு காரில் விரட்டிச் சென்றபோது வெள்ளைகல் அருகே சாலையோர சுவற்றில் கடத்தல் நபர் ஓட்டிவந்த கார் மோதி நின்றது.