தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூ-ட்யூப் பார்த்து செல்போன் பறிப்பு  - இருவர் கைது

பல்லாவரத்தில் யூ- ட்யூப் பார்த்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

யூடியூப் பார்த்து செல்போன் திருட்டு
யூடியூப் பார்த்து செல்போன் திருட்டு

By

Published : Jul 18, 2021, 7:49 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி பகுதியில் செளந்தர்யா என்ற பெண் சாலையில் நடந்துகொண்டிருந்தபோது,

இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து செளந்தர்யா சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பெயிண்டிங் வேலை செய்யும் குன்றத்தூரைச் சேர்ந்த டேனியல் (23), மடிப்பாக்கத்தை சேர்ந்த சகாயராஜ் (47), என்பது தெரியவந்தது.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட டேனியலுக்கு சகாயராஜ் சித்தாப்பா ஆவார். இருவரும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கமுடையவர்கள். அப்படி இருவரும் நேற்று (ஜூலை. 17) சகாயராஜ் வீட்டில் மது அருந்திவிட்டு டேனியல் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

செல்போன் பறிப்பு:

இருவரும் திருநீர்மலை சாலை, நாகல்கேணி அருகே சென்றபோது சௌந்தர்யா செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை டேனியல் கண்டுள்ளார்.

முன்னதாக யூ-ட்யூபில் செல்போன் குறித்து பார்த்திருந்த டேனியல், தனக்கு செல்போன் இல்லை என்ற ஏக்கத்தில் சௌந்தர்யாவிடம் இருந்த செல்போனைப் பறித்துள்ளார்.

இதுகுறித்து விவரம் அறியாத சகாயராஜ் டேனியல் செல்போன் பறித்ததை அறிந்துள்ளார். இதனையடுத்து இருவரும் செல்போனை திரும்பக்கொடுக்கச் சென்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் பயந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரையும் பிடித்து கைது செய்து அவர்களது வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:ஒகேனக்கலில் தடையை மீறி ஆயில் மசாஜ், போதைக் குளியல்: கண்டுகொள்ளுமா காவல் துறை?

ABOUT THE AUTHOR

...view details