தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30 லட்சம் திருடிய வழக்கு - இருவர் கைது - சென்னையில் வங்கி கணக்கில் இருந்து திருட்டு

சென்னையில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30 லட்சம் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருவர் கைது
இருவர் கைது

By

Published : Dec 11, 2021, 7:42 PM IST

சென்னை: அம்பத்தூரை சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். சுப்புராஜ் தனக்கு உதவியாக சகோதரரின் மகன்களான அரவிந்த் குமார் மற்றும் கோகுல் ஆகியோரை வேலைக்கு சேர்த்துள்ளார்.

2017ஆம் ஆண்டு சுப்புராஜ் உயிரிழந்த நிலையில், அவரது மகன் ரமேஷ் பாபு டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தை கவனிக்கத் தொடங்கினார்.

அப்போது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 30 லட்சத்து 40 ஆயிரத்து 817 ரூபாய் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தனது சகோதரர்களிடம் ரமேஷ் பாபு முறையிட்டார். அப்போது அவ்விருவரும் முறையான பதில் அளிக்காமல் தலைமறைவாகினர்.

இதனைத் தொடர்ந்து ரமேஷ் பாபு வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது தலைமறைவானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அரவிந்த் குமார் மற்றும் கோகுல் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சிம்பு மருத்துவமனையில் அனுமதி; சோகத்தில் ரசிகர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details