சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் வித்யாசேகர் (24). இவர் தச்சு வேலை செய்துவருகிறார். இவரது நண்பர்கள் ஆவடி காமராஜர் நகர், கணபதி கோயில் தெருவைச் சார்ந்த கார்த்திக் (38), பாடி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ் (28).
வித்யாசேகர், தனது நண்பர்கள் கார்த்திக், சதீஷ் ஆகியோருடன் பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். இதன் பிறகு அவர்கள் மூவரும் பாடி, தெற்கு மாட வீதி வழியாக வரும்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், வித்யாசேகர் தரையில் கிடந்த கல்லை எடுத்து நண்பர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், சதீஷ் இருவரும் சேர்ந்து அருகிலுள்ள ஒர்க் ஷாப்பில் இருந்த ஸ்பேனரை எடுத்து வித்யாசேகரின் உச்சந்தலையில் சரமாரியாக அடித்துள்ளனர். வித்யாசேகர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.