தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பெயரில் போலி பணி நியமன ஆணை: 2 பேர் கைது - fake appointment order

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கிய இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலி பணி நியமன ஆணை
போலி பணி நியமன ஆணை

By

Published : Jan 5, 2021, 6:22 AM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பெயரில் சிலர் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி பணம் பெற்று வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நாகேந்திராவ் (53), தண்டையார்பேட்டையை சேர்ந்த ஞானசேகர் (42) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பல பேரிடம் குரூப் 2 பிரிவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

பின்னர் காவல் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் கோடிக் கணக்கில் மோசடி செய்த தம்பதி!

ABOUT THE AUTHOR

...view details