தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூடுதலாக இரண்டு இணை தலைமை தேர்தல் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேளாண் துறையின் இணைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த், சுகாதாரத்துறையின் இணைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் யாதவ் ஆகியோரை இணை தலைமை தேர்தல் அலுவலர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவை தற்காலிக பணியிடங்களாக ஓராண்டுக்கு உருவக்கப்பட்டுள்ளது.