சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று (ஏப்.5) காலை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாகுபர் அலி (32), முகமது ஜபீர் (24) ஆகிய இரு பயணிகள் மீதும் சந்தேகமடைந்த அலுவலர்கள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர், அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவர்களது உள்ளாடைகளுக்குள் 255 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.