கடந்த இரு தினங்களுக்கு முன்பு அசுரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் ட்விட்டரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டாலின், முரசொலி அலுவலகத்தின் பட்டாவை ட்விட்டரில் பதிவிட்டு இது தனியாருக்குச் சொந்தமான நிலமென்றும் மருத்துவர் ராமதாஸ் பச்சையாக புளுகியிருக்கிறார் என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் கூடுதலாக ஒருபடி மேல போய் 'முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்' என்று ராமதாஸின் ட்விட்டுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இதனிடையே, ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப்பதிவு ஆவணமும் மூல ஆவணங்களும்தான். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?