சென்னை:தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்து ஓராண்டு நிறைவையொட்டி, திமுகவின் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். அனால், மறுபுறம் மின்வெட்டு மற்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு ரூ.1000 வழங்காதது போன்றவை கடும் விமர்சனம் பெற்று வருகிறது.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், "ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!" என கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். அதில், "கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்" என பதிலடி கொடுத்திருந்தார்.