தமிழ்நாடு

tamil nadu

சென்னை வாக்காளர் சிறப்பு முகாம்: 23 ஆயிரத்து 519 பேர் விண்ணப்பம்

By

Published : Nov 14, 2022, 4:21 PM IST

சென்னையில் இரண்டு நாட்களாக நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் 23 ஆயிரத்து 519 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் மொத்தம் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் ஆண்கள் 19,15611 பேர், பெண்கள் 19,75788 பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நவ.12, 13 மற்றும் 26, 27 ஆகிய நாட்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 23,519 பேர் நேரடியாக வந்து விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். அதன்படி, நேற்று ஒருநாள் மட்டும் 17,486 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதில் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களை 16,327 பேரும், பெயரைத் திருத்துதல், புகைப்படத்தை மாற்றுதல், முகவரியை மாற்றுதல், போன்ற திருத்தப் பணிகளுக்கு 7,192 பேரும் மனுக்களை வழங்கியுள்ளனர். இந்த வாக்காளர் சிறப்பு முகாமில் விடுபட்டவர்கள் 26, 27 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல் - 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details