தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசுத்தலைவர் விருதுகளை பெறும் 27 தமிழ்நாடு காவலர்கள் - குடியரசு தலைவர் விருது

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறையில் 27 பேருக்கு இந்திய குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Etv Bharat குடியரசு தலைவர் விருதுகளை பெரும் காவலர்கள்
Etv Bharat குடியரசு தலைவர் விருதுகளை பெரும் காவலர்கள்

By

Published : Aug 14, 2022, 5:54 PM IST

சென்னை:இந்திய அரசு 2022ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையில் 27 பேருக்கு இந்திய குடியரசுத்தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது. அனைத்திந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இருமுறை விருதுகள் வழங்கப்படுகின்றன.

காவல் துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய குடியரசுத்தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள், தமிழ்நாடு காவல் துறையைச்சார்ந்த மூன்று பேருக்கு வழங்கப்படுகின்றன.

  • கி.சங்கர், ஐபிஎஸ், சென்னை கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் நிர்வாகம்
  • சி.ஈஸ்வரமூர்த்தி, சென்னை காவல்துறைத் தலைவர், நுண்ணறிவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு),
  • ம.மாடசாமி, சேலம் மாவடம் வடக்கு காவல்துறை துணை ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு.

மேலும் இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான காவல் விருதுகள் தமிழ்நாடு காவல் துறையைச் சார்ந்த 24 பேருக்கு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:தற்கொலை செய்துகொண்ட காவலரின் உடலை ஊருக்குள் அனுமதிக்க மறுத்ததால் சலசலப்பு

ABOUT THE AUTHOR

...view details