இந்திய அளவில் கரோனா தொற்றுக்கு இதுவரை ஆறு லட்சத்து 73 ஆயிரத்து 165 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 693ஆக உயந்துள்ளது.
இதில், தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை ஐந்து) மேலும் நான்காயிரத்து 150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 60 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கையும் 1,510ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நான்காவது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதில், சென்னையில் மட்டும் 1173 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூலை ஆறு) உயிரிழந்துள்ளனர். இவர்களில் தனியார் மருத்துவமனைகளில் நான்கு பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் ஆறு பேரும், கே.எம்.சி மருத்துவமனையில் மூன்று பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆறு பேரும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆறு பேரும் சிகிச்சைப் பெற்று வந்ததாகச் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனாவிலிருந்து மீண்ட 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இந்தியர்கள் - மத்திய சுகாதார அமைச்சகம்