டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 18% உயர்வு
டிவிஎஸ் நிறுவனத்தின் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 23 சதவிகிதம் அதிகரித்து 1,01,789 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இருசக்கர வாகன ஏற்றுமதி 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், மூன்று சக்கர வாகன விற்பனை 13,166 ஆகக் குறைந்துள்ளது.
சென்னை: டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2,97,747 வாகனங்களை விற்பனை செய்து 18 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.
2021 பிப்ரவரி மாதத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 18 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருசக்கர வாகன விற்பனை 21 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனை 15 சதவிகித வளர்ச்சி அடைந்து 1,95,145 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
மோட்டார் வாகன விற்பனை 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 56 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 95,525 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 23 சதவிகிதம் அதிகரித்து 1,01,789 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இருசக்கர வாகன ஏற்றுமதி 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், மூன்று சக்கர வாகன விற்பனை 13,166 ஆகக் குறைந்துள்ளது.
ஏற்றுமதிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், வாகனங்களை ஏற்றிச் செல்ல போதிய அளவில் கண்டெய்னர் வசதி இல்லாததால், ஏற்றுமதிகளை அதிகரிக்க இயலவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.