தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனையில் சாதனை! - டிவிஎஸ் அப்பாச்சி பைக்

சென்னை: டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி மாடல் இதுவரை 40 லட்சம் பைக்குகள் விற்பனையாகியுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்பாச்சி
அப்பாச்சி

By

Published : Oct 12, 2020, 5:55 PM IST

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஸ் நிறுவனத்தின் மிகப் பிரபலமான மாடல் டிவிஎஸ் அப்பாச்சி. 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அப்பாச்சி பைக்குகள், இளைஞர்களைக் கவரும் விதமான வடிவமைப்பு, பந்தயங்களுக்கு ஏற்ற பைக் என்பதால் அதிக அளவினாவர்கள் இதனை வாங்கினர்.

தற்போது டிவிஎஸ் அப்பாச்சி மாடலை 40 லட்சம் பேர் வாங்கியுள்ளதாகவும், இதன் 40 லட்சமாவது பைக் விற்பனை கொண்டாட்டத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிவிஎஸ் மோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமைச் செயல் அவலருமான ராதாகிருஷ்ணன், “சில வருடங்களாக இளம் வயதினர் அதிக செயல்திறன் உள்ள உயர் ரக பைக்குகளில் ஆர்வம் காட்டினர். இதனால் டிவிஎஸ் அப்பாச்சி மாடல் பைக்குகள் உலகெங்கும் பிரபலமடைந்தன.

ஆப்பாச்சி பைக்குகளில், 160 முதல் 310 சிசி எஞ்சின்கள், ஆர்டி-ஃப்ஐ எஞ்சின், ஸ்மார்ட் கனெக்ட், சிலிப்பர் கிளட்ச், ஜிடிடி ஆகிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அப்பாச்சி உரிமையாளர்களுடன் இணைவதற்காக அப்பாச்சி ஓனர்ஸ் குருப், அப்பாச்சி ரேசிங் எக்ஸ்பீரியன்ஸ் ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

40 லட்சமாவது பைக் விற்பனையைக் கொண்டாடும் விதமாக டிவிஎஸ் மைசூரு தொழிற்சாலையில் 957 அடி நீளத்தில், மிகப் பெரிய வாகன பந்தயங்களின் முடிவில் காட்டப்படும் கருப்பு-வெள்ளை கொடி உருவாக்கப்பட்டு, ஆசியா பூக் ஆப் ரெகாட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

2 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட படங்களை வைத்து இந்தக் கொடி உருவாக்கப்பட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details