இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையம் எனும் தன்னாட்சி அதிகாரமுடைய தீர்ப்பாயத்தை, ஜல்சக்தித் துறையோடு சேர்த்ததன் மூலம், அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது மத்திய அரசு. இது, மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியே மாநிலத்திலும் இருந்தால் அதற்கே சாதகமாக மத்திய அரசும் நிற்க வழிவகுக்கும். அதற்காகத்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சியதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது.
ஜல்சக்தித்துறையின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் - மக்களுக்கு வேல்முருகன் அழைப்பு! - வேல்முருகன்
சென்னை: காவிரி ஆணையத்தை, ஜல்சக்தித்துறையின் கீழாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதை எதிர்த்து அவரவர் வீட்டின் வெளியே நின்று போராட்டம் நடத்த வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
எனவே காவிரி, மேலாண்மை ஆணையத்தின் தன்னதிகாரத்தைப் பறித்து, அதனை ஜல் சக்தித் துறையின் கீழ் இணைத்த மத்திய அரசின் முடிவைக் கண்டித்து ’காவிரி உரிமை மீட்புக் குழு’ சார்பில், இன்று 7-05-2020 மாலை 5 மணி அளவில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களும் கலந்துகொண்டு அவரவர் வீடுகளில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்“ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா இறப்பு விகிதம்; தமிழ்நாடு - 0.8%, சென்னை - 0.9%!