தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் வாக்காளர் ஏ.வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நடந்து முடிந்த மக்களவைத் தொகுதி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி கருணாநிதி போட்டியிட்டார். அவர் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார். அவருடைய கணவர் அரவிந்தனின் வருமானம், வருமான வரித் தொடர்பான விவரங்களை கனிமொழி வேட்பு மனுவில் தாக்கல் செய்வில்லை. கணவர் சிங்கப்பூர் குடிமகனாக உள்ளார். அவர்களுடைய வருமான வரி தொடர்பான விவரங்கள் பொருந்தாது.
தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கு - பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - தூத்துக்குடி கனிமொழி வெற்றி எதிர்த்து வழக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம், கனிமொழியும் இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிமொழி, தன்னுடைய கணவர் அரவிந்தனின் வருமான வரி விவரங்கள், குறிப்பிடப்படாத மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தவறு. முழுமையான விவரங்கள் இல்லாமல் கனிமொழி தேர்தல் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது சட்டவிரோதமானது. எனவே, அவருடைய தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.மகேஷ் ஆஜராகி வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.