இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பதிவில், "சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளித் துறையில் புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிற இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
சந்திரயான்-2 விண்கலம் வெற்றிக்கு தினகரன் வாழ்த்து! - சந்திராயன் - 2
சென்னை: சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் விண்வெளித் துறையில் புதிய சாதனைப் படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![சந்திரயான்-2 விண்கலம் வெற்றிக்கு தினகரன் வாழ்த்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3914116-thumbnail-3x2-ttvf.jpg)
தினகரன்
அதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி வனிதா முத்தையா, திட்ட இயக்குநராக இருந்து இந்தச் சாதனையை நிகழ்த்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரோடு சேர்ந்து சந்திரயான்-2 குழுவில் பணியாற்றிய 30 விழுக்காடு பெண்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவரும் இதன் மூலம் வரலாற்றில் தங்களுடைய பெயரைப் பொறித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்" என தெரிவித்தார்.