தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் வென்ற இளவேனிலுக்கு தினகரன் வாழ்த்து! - தங்கம் பதக்கம்

சென்னை: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வளரிவானுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

shooting gold medalist

By

Published : Aug 29, 2019, 12:38 PM IST

பிரேசிலிலுள்ள ரியோ டி ஜெனிரோவில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டின் இளவேனில் வளரிவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இவரின் இச்சாதனையை பாராட்டி இந்தியளவில் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இளவேனிலுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உலக அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிற தமிழக வீராங்கனை செல்வி இளவேனில் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

தினகரனின் ட்விட்டர் பதிவு

பிரேசிலில் நடைபெற்ற 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்த சாதனையைப் புரிந்திருக்கும் இளவேனில், கடந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் தங்கம் வென்றவர். 20 வயதிலேயே இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும் இளவேனில், உலகளவில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்திட வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details