சென்னை திநகரில் உள்ள இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து அரசியல் தொடர்பாக ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையை சசிகலா வலியுறுத்தி வந்தார். தொடர்ந்து அரசியலிருந்து ஒதுங்கி இருந்தால் தான் தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பீர்கள் என்றும் சொல்லி வந்தார். ஆகவே இந்த முடிவை அறிவித்திருக்கிறார். அதிமுகவினர் யாரும் ஒற்றுமையாக இல்லை.
சசிகலாவின் முடிவு டிடிவி வருத்தம் தொண்டர்களின் ஒற்றுமைக்காகவே அரசியலிருந்து விலகுகிறார்!
அனைவரும் ஒற்றுமையாக வேண்டும் என்பதற்காகவே தான் ஒதுங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தொண்டர்களில் 18 எம்எல்ஏக்கள் சேர்ந்து உருவானதுதான் அமமுக என்ற அமைப்பு. அமுமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று நான் கூறி வருகிறேன். அமமுக தலைமையில் அமையும் கூட்டணியில் திமுக என்ற தீய சக்தியை ஒழிப்போம்.
சசிகலாவின் அரசியல் முடிவு அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில்!
அடுத்த கட்டமாக அமமுக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் அவர் கட்சியிலிருந்து ஒதுங்குவது எனக்கே சோர்வை ஏற்படுத்துகிறது. வரும் 10ஆம் தேதியில் அமமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.