தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செவிலியர்களுக்கு டிடிவி தினகரன் ட்விட்டர் வாழ்த்து - தமிழ் செய்திகள்

சென்னை: சர்வதேச செவிலியர் தினமான இன்று (மே 12) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு
டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு

By

Published : May 12, 2020, 2:11 PM IST

உலகம் முழுவதும் மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பலரும் செவிலியர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது;

மருத்துவத்துறையின் முதுகெலும்பாக திகழ்ந்து, நோயாளிகளிடம் தாயன்பு காட்டி எந்தச்சூழ்நிலையிலும் இன்முகத்தோடு சேவையாற்றி வரும் செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த செவிலியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பணி ரீதியாக தங்களுக்குள்ள மனக்குறைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தங்கள் உயிரைப் பணயம் வைத்து தியாக உள்ளத்தோடு கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்கள் என்றைக்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.

இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருதல் ஆகியவையே செவிலியர்களுக்குச் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓடிடி தளங்களில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் திரைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details