அமமுக பொதுச் செயலாளரும், ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளருமான ராமநாதன் துளசிக்கும் நேற்று (ஜூலை 26) புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தினகரனின் பண்ணை வீட்டில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதது. ராமநாதன் துளசி காங்கிரஸ் முன்னாள் எம்பி பூண்டி துளசி வாண்டையாரின் பேரனும் ஆவார்.
வாண்டையார் குடும்பத்துக்கு சம்பந்தியான டிடிவி தினகரன்! - ttv dinakaran daughter
புதுச்சேரி: டிடிவி தினகரன் மகளுக்கும் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் நேற்று எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணி நிச்சயதார்த்தம்
இந்தத் திருமணத்தைச் சசிகலா சிறையிலிருந்தே பேசி முடித்துள்ளார் என்றும், பரோலில் வந்து சசிகலாவின் தலைமையில் ஜனவரி மாதத்திற்குள் திருமணத்தை நடத்த டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மத உணர்வைத் தூண்டும் அரசியலுக்கு தமிழ்நாட்டு மண்ணில் இடமில்லை - டிடிவி தினகரன்