தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்லூர் ராஜூ அறிவித்த கடன் திட்டம் கானல் நீர்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்த 50 ஆயிரம் ரூபாய் கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அலுவலர்கள் கூறுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினகரன்
தினகரன்

By

Published : Jun 5, 2020, 2:46 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ. 50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.

ட்விட்டர் பதிவு
அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அலுவலர்கள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன. கரோனா துயரால் ஏற்கனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது.
ட்விட்டர் பதிவு
அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப் பெறுவதற்கான வழிமுறைககள் என்ன? - என்பனவற்றை எல்லாம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழ்நாடு அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவு

ABOUT THE AUTHOR

...view details