தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கர்ப்பிணிகளை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும்' - டிடிவி  தினகரன்! - madurai doctor death

சென்னை: கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிடிவி
TTV Dhinakaran

By

Published : May 9, 2021, 10:47 AM IST

மதுரை மாவட்டம் அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த மருத்துவர் சண்முகப்பிரியா, கரோனா தொற்று ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (மே 8) உயிரிழந்தார். இது மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் சண்முகப்பிரியா மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மருத்துவர் சண்முகப்பிரியா மறைவுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், " 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கரோனா தடுப்புப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். சண்முகப்பிரியா கரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த செய்தி பெரும் வேதனை அளிக்கிறது.

டிடிவி தினகரன் ட்வீட்

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்

கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளர்.

ABOUT THE AUTHOR

...view details