கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் அடுத்தடுத்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. சிறையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இருவரின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பிவருகின்றன.
அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ், பென்னீக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.