தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூர்வாரும் பணிகள் அரைகுறை: அதிமுகவுக்கு டிடிவி கண்டனம்!

சென்னை: பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்ட பிறகும் காவிரி டெல்டாவின் பல இடங்களில் அவசரக் கோலத்தில் அரைகுறையாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் அதிமுக அரசுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran  டிடிவி தினகரன்  அமமுக  அமமுக அறிக்கை  டெல்டா  ammk  ammk statement  TTV Dhinakaran statement
பாசனத்திற்கான நீரை நிறுத்தி வைத்து ஆறுகளில் கட்டுமானப்பணிகள்: அதிமுக அரசுக்கு டிடிவி கண்டனம்

By

Published : Jun 23, 2020, 4:59 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டாண்டுகளாக கடைசி நேரத்தில் ஆறுகள், வாய்க்கால்களைப் பெயரளவுக்குத் தூர்வாரி கணக்கு காண்பிப்பதையே வழக்கமாக வைத்திருப்பதாக விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் அதிமுக அரசு, இந்தாண்டும் டெல்டா பகுதி பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்ட பின்னரும் சில கிளை ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளிவருகின்றன.

இதனால் ஆங்காங்கே தண்ணீரை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து கட்டுமானத்தின் ஈரம் காய்வதற்குள் தண்ணீரைத் திறந்துவிடும்போது புதிய கட்டுமானங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும். கடந்த இரண்டாடண்டுகளாக இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இந்தாண்டும் அதையேச் செய்கிறார்கள் என்று வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன.

அதுமட்டுமல்ல, அதிமுக அரசு எந்த லட்சணத்தில் தூர்வாருகிறது என்பதற்குச் சமீபத்தில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கல்லணைக் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பே சாட்சியாகும். கரையை சரியான முறையில் பலப்படுத்தப்படுத்தாததால் இந்த உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பருவமழை தொடங்கி தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது கல்லணைக் கால்வாயில், மேலும் பல இடங்களில் உடைப்பு ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். ஆனால், முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித் துறை, இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதில் டெண்டர் விட்டு நிதி ஒதுக்க முடியும் என்பதில்தான் முழு கவனத்தையும் செலுத்திவருகிறது.

தூர்வாருவதைத்தான் இந்த ஆட்சியாளர்கள் முறையாகச் செய்யவில்லை; கரைகளில் உடைப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான பணிகளையாவது செய்திட வேண்டும். பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவை இணைந்து தொடர்ந்து நீர்நிலைகளைக் கண்காணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'எடப்பாடி பழனிசாமியைக் கடவுளும் மன்னிக்கமாட்டார்' - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details