தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இபிஎஸ் கூட்டணியில் அமமுகவா?.. டிடிவி தினகரனின் பதில் என்ன? - சென்னை செய்திகள்

'எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் ஒருபோதும் இணையமாட்டேன்' என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 27, 2022, 4:13 PM IST

சென்னை:அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த அக்கட்சியின் கழக சார்பு அணிகளுடனான மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று (நவ.27) நடந்தது. இக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அம்மா பேரவையின் மாநில செயலாளர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கட்சி வளர்ச்சி பணி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நோக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, அதிமுக தலைவர்கள் மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் ரீதியாக ஒருவரை விமர்சனம் செய்வது, அதைத் தாண்டி நிதானம் தவறி, ஒரு சுயநினைவு தவறிய நிலையில் இருப்பது போன்ற மனிதரின் பேச்சு, அவர்கள் அளவுக்கு தரம் தந்து போகவேண்டாம் என்று நினைக்கிறேன். இவை எல்லாம் பயத்தினால் செய்யும் நடவடிக்கை. அதனால், அதனை பெரிதுபடுத்த வேண்டாம். மறைந்த முதலமைச்சர் கொள்கையைப் பின்பற்றுவதுதான் எங்கள் நோக்கம்.

"எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் வாருங்கள் என்கிறேன். இரட்டை இலையும் கட்சியும் இருப்பதால்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணையவேண்டும் என்பது நியாயமான எனது கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் எண்ணம்" எனக் கூறினார்.

ஒரு நாட்டிற்கு இரண்டு பலமான கட்சிகள் இருந்தால்தான் சரியாக ஜனநாயகம் வலுவாக இருக்கும்.
திமுக தலைமையிலான கூட்டணி 2019 -21 வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இன்று திமுக மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது. நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அதிக கூட்டணி இருந்தாலும் மக்கள் ஆதரவு வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து பலம் இழந்து வருகிறது. தொடரும் அரசு மருத்துவமனை உயிரிழப்பு குறித்த கேள்விக்கு, மருத்துவத்துறையில் அரசு கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை இதை இன்னும் கவனத்துடன் அணுக வேண்டும். 17 வயது மாணவி பிரியாவை தொடர்ந்து நேற்று மூன்று அரை வயது ஆண் குழந்தை இறந்துள்ளது. ஒரு சில தவறுகள் நடப்பதை அரசு தொடர்ந்து கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆதார் கார்டு மின் அட்டை இணைப்பு குறித்த கேள்விக்கு, மின்சாரத்துறை உரிய கால அவகாசம் கொடுக்கவேண்டும். மக்களுக்கு எளிதாக இருக்கவேண்டும். தாமதம் ஏற்பட்டால் அபராதம் அளிக்காமல் இருக்கவேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு குறித்து, எடப்பாடி தலைமையில் கூட்டணி பலம் இழந்து உள்ளது. கட்சி இருக்கிறது என்று காட்டிகொள்ள செய்வதாக தெரிவித்த அவர் பழனிசாமி தலைமையில் அணியில் நான் இணைய வாய்ப்பே இல்லை' எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழக மருத்துவத்துறை மந்தமான நிலையில் உள்ளது - மாஜி அமைச்சர் ஜெயக்குமார்!

ABOUT THE AUTHOR

...view details