தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரட்டை இலைச் சின்னம் கிடைத்தாலும் எடப்பாடி பழனிசாமியால் ஜெயிக்க முடியாது - டிடிவி தினகரன் - admk

'ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. இரட்டை இலை சின்னத்திற்கு சக்தி இனி இல்லை. ஏனென்றால், அது தவறான நபர்களின் கையில் உள்ளது' என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV dhinakaran said that Edappadi Palaniswami team cannot win even if they get the double leaf symbol
இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் எடப்பாடி பழனிசாமியால் ஜெயிக்க முடியாது - டிடிவிதினகரன்

By

Published : Feb 8, 2023, 3:33 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. என்னிடம் யாரும் பேசி அமமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை. ஈரோடு கிழக்கில் ஜெயிப்போம் என நம்பியதை விட நல்ல வாக்கு சதவிகிதத்தை பெறுவோம் என நம்பினோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் இல்லாததால் போட்டியில்லை.

குக்கர் சின்னம் இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே போட்டியில்லை. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்குத் தெரியும். ஈரோடு கிழக்கில் தீய சக்திகளுக்கும், துரோக சக்திகளுக்கும் அமமுக ஆதரவு அளிக்காது.

2024 நாடாளுமன்றத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடும். இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம். இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் அவர்கள் வென்றுவிடுவார்களா? அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களுக்கே இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்து செயல்பட வேண்டும்.

ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று நான் கூறவில்லை, ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்று தான் கூறினேன். திமுக, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை அதிகமாக செலவு செய்கிறது. ஓபிஎஸ் எனது நண்பர் மற்றும் அவர் மீது தனிப்பிரியம் உண்டு. நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் தேர்தல் ஆணையம் மட்டுமே. எந்த அரசியல் காரணமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்தாலும் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. இரட்டை இலைச் சின்னத்திற்கான சக்தி இனி இல்லை. ஏனென்றால் அது தவறான நபர்களின் கையில் உள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவிடம் அடகு வைக்கப்பட்ட கட்சி அதிமுக - ஜவாஹிருல்லா கடும் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details