இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிதாக ஒதுக்கப்பட்ட நிதியில் வெளிப்படைத்தன்மையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த இரண்டாண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், கடுமையான குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாடு மக்களைத் திசைதிருப்பவே புதிதாக 500 கோடி ஒதுக்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது.
'குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த 2 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்னஆனது?' - edappadi govterment
சென்னை: இரண்டு ஆண்டுகளாக நடந்த குடிமராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டாண்டுகளாக குடிமராமத்துப் பணியின் கீழ் எந்தெந்த நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன என்ற வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு எந்தெந்த நீர்நிலைகளில், என்னென்ன பணிகள்நடைபெறவிருக்கின்றன என்ற பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்.
அடிப்படைத் தேவையான தண்ணீர் பிரச்னையைக் கூட இவ்வளவு அலட்சியமாக கையாண்டால் மக்கள் இவர்களை நிச்சயம் மன்னிக்கமாட்டார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.