தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல - டிடிவி தினகரன்

நீட் மசோதாவை தமிழ்நாட்டின் ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு அமமுக பொதுச்செயலாளர் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.

நீட் மசோதா திருப்பி அனுப்பியது ஏற்ப்புடையது அல்ல; டிடிவி தினகரன்
நீட் மசோதா திருப்பி அனுப்பியது ஏற்ப்புடையது அல்ல; டிடிவி தினகரன்

By

Published : Feb 4, 2022, 9:59 AM IST

Updated : Feb 4, 2022, 10:07 AM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல” என்று பதிவிட்டிருந்தார்.

அதிமுகவும் திமுகவும் நாடகம் நடத்துகின்றனவா?

அதிமுக திமுக நாடகம் நடத்துவதாக மற்றுமொரு பதிவில் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசு நடத்திய நாடகத்திற்கு கொஞ்சமும் சளைக்காத வகையில், ‘ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாகச் செயல்படுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

இதையும் படிங்க:திமுக வட்டசெயலாளர் கொலை வழக்கு: 7 பேர் கைது

Last Updated : Feb 4, 2022, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details