சென்னை:அமமுக சார்பில் அக்கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று (நவ.30) ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்ளிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாசில்லாமல் பேச வேண்டும். ஏழை எளிய மக்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் இவர்கள் எல்லாம் 'அம்மா உணவகம்' மூலம் எவ்வளவு பயனடைந்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். நல்ல தரமான உணவு குறைந்த விலையில் விலைவாசி உயரும் நேரத்திலும் அரசாங்கமே, இதுபோன்ற உணவு அம்மா உணவகங்கள் மூலம் உணவு கொடுத்ததை பல பொருளாதார அறிஞர்களே பாராட்டினார்கள் என்றார்.
மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தவைகளுக்கு மூடு விழா நடத்தவேண்டும் (அ) அவர்களின் தலைவர் பெயரில் மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். உணவகங்களின் தரத்தை அரசுதான் கண்காணிக்க வேண்டும் என்ற அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கினால், மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என குற்றம்சாட்டினார்.