சென்னை: அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், "இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.