சென்னை:டெல்லியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28) நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது. இதனால், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது.
இதனை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, நிலுவையில் உள்ள 54 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியது. இதற்கு போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் அதிகளவில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது, கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிற்கு தினந்தோறும் 5 ஆயிரம் கன அடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு ஏற்க மறுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:'INDIA' கூட்டணியால் காவிரி நீரை பெற்று தமிழகத்திற்கு விடியல் தர இயலுமா? - ஆளுநர் தமிழிசை கேள்வி