சென்னை தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் அரிமுத்து. இவர் இன்று காலை 10 நிமிடங்கள் காலதாமதமாக பணிக்கு வந்ததால் பணிமனையின் கிளை மேலாளர் பாலு, பேருந்தை இயக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அரிமுத்து, உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது அருகில் இருந்த மற்ற ஊழியர்கள் அவர்மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர்.