சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்தித்து புதிய மோட்டார் வாகன சட்டம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகன் வெங்கடாசலம்,"மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தினால் மோட்டார் வாகன தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளனர்.
லாரி சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு எனவே இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஏற்கக் கூடாது என்கிற அடிப்படையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
மேலும், சுங்கச்சாவடி என்ற பெயரில் அதிகளவு கட்டணம் வசூலிப்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளோம். அந்த புகார் குறித்து பரிசீலனை செய்வதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க:'இனிமே இவங்க தான் ஃபைன் வாங்கணும்' - வெளியிடப்பட்டது புதிய வாகனச் சட்ட அரசாணை!