தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிக்னலில் நின்றுகொண்டிருந்த டூ விலர் மீது லாரி மோதல்: இளைஞர் பலி - தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரி

சென்னை: தாம்பரம் அருகே சிக்னலில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

death
death

By

Published : Nov 19, 2020, 5:26 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பிரேம் குமார் (25). இவர் சேலையூரில் உள்ள இருசக்கர வாகனம் வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், வேலை முடித்துவிட்டு பிரேம் குமார் தாம்பரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரி அருகே சிக்னலில் நின்றுகொண்டிருந்தார்.

உயிரிழந்த இளைஞர் பிரேம்குமார்

அப்போது பின்னால் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த லாரி பிரேம் குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிலைதடுமாறி பிரேம் கீழே விழுந்துள்ளார். அப்போது பிரேம் குமாரின் தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய லாரி

அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாக லாரியை மடக்கிப் பிடித்தனர். லாரியை ஊத்துகாடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் நரேந்திரன் ஒட்டிவந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நரேந்திரனை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

லாரி ஓட்டுநர் நரேந்திரன்

மேலும் பிரேம் குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக காவல் துறையினர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இந்த விபத்துக் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details