தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகன் கண் முன்னே தந்தையின் உயிர் பிரிந்த சோகம் - Truck collision near Thiruninravur

சென்னை: பெரியபாளையம் சாலையில் மகன் கண் முன்னே தந்தை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநின்றவூர் அருகே லாரி மோதி விபத்து
திருநின்றவூர் அருகே லாரி மோதி விபத்து

By

Published : Jan 30, 2020, 9:19 AM IST


திருநின்றவூரை அடுத்த விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (48). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவருக்கு கார்த்திகேயன் (23), தீனதயாளன்(19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோடீஸ்வரனும் அவரது மகன் தீனதயாளனும் பெரியபாளையம் சாலையில் திருநின்றவூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அதே வழியில் வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கோடீஸ்வரன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மகன் தீனதயாளன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநின்றவூர் அருகே லாரி மோதி விபத்து

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படிங்க:

‘ஆபாச படமா... கட்டங்கட்டி தூக்குவோம்’ - போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details