தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச வேட்டி, சேலை வழங்கலில் சிக்கல்?

தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக ரூ.499 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோராததால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை கிடைப்பதில் சிக்கல் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவச வேட்டி, சேலை
இலவச வேட்டி, சேலை

By

Published : Sep 24, 2021, 7:11 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு ஓவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சுமார் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது.

இவற்றைத் தயாரித்து முடிக்க ஆறு மாதங்களாகும் என்பதால், ஆண்டுதோறும் ஜூன் மாதம் நிதி ஒதுக்கப்பட்டு, விசைத்தறிகளுக்கு பாவு நூல், ஊடை நூல் உள்ளிட்ட மூலப்பொருள்கள் வழங்கப்பட்டன.

கேள்விக்குறியான பொங்கல் பரிசு?

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலைகலை தயாரிப்பதற்காக ரூ. 499 கோடி நிதி ஒதுக்கியது. இருப்பினும் இதுவரை நூல்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்படவில்லை.

வேட்டி, சேலை தயாரிப்புப் பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், ஒரு லட்சத்து 10 ஆயிரம் விசைத்தறிகள் வேலையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் விசைத்தறிகளை நம்பி பிழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், மக்களின் பொங்கல் பரிசும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதையும் படிங்க:நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details