தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சென்னை: திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

special train

By

Published : May 8, 2019, 10:12 AM IST

திருவாரூரில் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மார்ச் 29ஆம் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக கொண்டுவர பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையை விடுத்தனர்.

மேலும், பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே சில நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவையால் பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே துறைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதையடுத்து திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்குப் புறப்பட்ட ரயில் திருத்துறைப்பூண்டி, தில்லைவளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு காலை 11.30 மணிக்கு வந்துசேரும். பின்னர் அங்கிருந்து காலை 11.32 மணிக்கு புறப்பட்டு, ஒட்டங்காடு-பேராவூரணி-ஆயங்குடி-அறந்தாங்கி-வாளரமாணிக்கம்-பெரியகோட்டை-புதுவயல்-கண்டனுார் ஆகிய நிலையங்களில் நின்று, பின்னர் பிற்பகல் 14.15 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தை அடையும்.

திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் சிறப்பு ரயில்

எதிர் மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து பிற்பகல் 14.30 மணிக்குப் புறப்பட்டு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு மாலை 17.18 மணிக்கு வந்து சேரும் எனவும், பின்னர் அங்கிருந்து மாலை 17.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 20.30 மணிக்கு திருவாரூர் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணிகள் ரயிலை விரைவில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details