ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர்கள் நாசர், அனிஷ் முகமது, நசீர். இவர்கள் மூவரும் சென்னை விமான நிலையத்திலிருந்து ’கால்டாக்சி’ மூலம் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வழியாக வந்தனர்.
அப்போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜன் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நாசர் உள்ளிட்டோர் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 140 கிராம் தங்கம், 20 மடிக்கணினிகள், 10 மதுபாட்டில்கள், 20 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.