சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) முன்னாள் மாணவ மாணவிகள் சங்கத்தினர் கூறியதாவது:
திருச்சி என்ஐடி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சென்னையில் வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த;d சந்திப்பு, முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது.
என்ஐடி கல்லூரி முன்னாள் மாணவர்கள் இதில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்து 200 மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில், என்ஐடியில் பயின்ற, பயின்றுவரும் மாணவிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்காக வின் என்ஐடிடி ( WIN- NITT) என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இவற்றோடு, மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களில் மாணவ மாணவிகள் ஆய்வு மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும், ஆய்வு படிப்புகள் அதிகரித்து புதிய கண்டுபிடிப்புகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும் என்ஐடி கல்லூரிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ரூபாய்) நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) முன்னாள் மாணவ மாணவிகள் சங்கத்தினர் கல்லூரியில் நவீன விளையாட்டு மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் துணை தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர், காக்னிசன்ட் நிறுவன தோற்றுவர்களின் ஒருவரான சந்திரசேகர், காக்னிசன்ட் நிறுவனத்தின் கிளைவுடு சேவையின் சர்வதேச தலைவர் ராஜா ரங்கநாதன், என்ஐடி இயக்குநர் மினி சிஜி தாமல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அரிட்டாபட்டி கிராமத்தையே அழகு ஓவியங்களாய் பிரதிபலித்த மாணவர்கள்