தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நீட் தேர்வில் வெற்றிபெற மாணவர்கள் தயாராக வேண்டும்; தற்கொலை தீர்வல்ல!’ - thirunvukarasar

சென்னை: நீட் தேர்வில் வெற்றிபெற மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு தற்கொலை தீர்வாகாது என்றும் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

thirunvukarasar

By

Published : Jun 6, 2019, 2:45 PM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்ததாகவும், இருப்பினும் வேறு வழியின்றி இந்த தேர்வு நடைபெற்றுவருவதால் அதனை எழுத மாணவர்கள் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தற்கொலை தீர்வாகாது என்றார்.

அதேபோல், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருப்பதாகத் தெரிவித்த திருநாவுக்கரசர், அதை வலியுறுத்த தாம் டெல்லி செல்வதாகவும் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு

இதற்கிடையே, முதலமைச்சரின் ட்விட்டர் பதிவு நீக்கம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தி திணிப்பு விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியிருப்பதாகவும், இந்தி மொழியை விருப்பமுள்ளவர்கள் கற்றுத் தேறுவதற்கான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details