தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநிலம் முழுவதும் மாதிரி வாக்குச் சாவடிகள் - மாதிரி வாக்குச்சாவடி

சென்னை: தேர்தலையொட்டி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

By

Published : Apr 4, 2019, 2:54 PM IST

Updated : Apr 4, 2019, 6:57 PM IST

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்க இருக்கிறது. இதனையொட்டி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம், தலைவர்களுக்கிடையேயான வார்த்தை மோதல்கள் என அரசியல் களம் பரபரத்து கிடக்கிறது.

மேலும், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை, உரிய ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல் என தேர்தல் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்க இருப்பதால் மாதிரி வாக்குச்சாவடிகள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக வாக்களிக்க செல்பவர் எந்த குழப்பமுமின்றி வாக்குச்சாவடிக்குள் சென்று தெளிவாக வாக்கு செலுத்திவிட்டு வரலாம்.

Last Updated : Apr 4, 2019, 6:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details