சென்னை: கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை தலைமையிட வளாகத்தில் ஸ்டாலின் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் (நாகலிங்க மரம்) நடும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
அறநிலையத் துறை, பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கோயில்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே நாகலிங்க மரம் இருப்பதால், அம்மரம் தலமரம் எனப் போற்றப்படுகிறது. திருக்கோயில்களில் அந்தந்தத் தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம் போன்ற மரங்கள் நட்டுப் பராமரிக்கப்படும்.