தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் அக்டோபர் 13ஆம் தேதி உயிரிழந்தார். இந்தத் தகவல் கிடைத்ததை அடுத்து வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, முதலமைச்சருக்கு ஆறுதல் கூற சென்னையிலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார்.
விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் அமைச்சர் துரைக்கண்ணு வந்து கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதைத் தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.,25) காலை முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரை பார்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனைக்கு செல்லயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு அனுமதி!